Tuesday, November 13, 2012

ராம் ஜெத்மலானியின் முகத்தில் துப்பினால் ரூ.5 லட்சம் சன்மானம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த உள்ளூர் சன்னியாசி ஒருவர், பா.ஜ.க. எம்.பி.யும் புகழ்பெற்ற வழக்குரைஞருமான ராம் ஜெத்மலானியின் முகத்தில் காறி உமிழ்பவருக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்குவேன் என்று அதிரடியாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அண்மையில், ராம பிரான் நல்லவர்தான், ஆனால் அவர் ஒரு நல்ல கணவர் இல்லை என்ற கருத்துப் பட ராம் ஜெத்மலானி பேசியிருந்தார். அவரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் கீதாதம் ஆஷ்ரமத்தில் பேசிய மகாமண்டலேஸ்வர் சுவாமி ஷ்யாம்தாஸ் மகாராஜ் இந்த சன்மானத்தை அறிவித்தார்.
ராம் ஜெத்மலானி இவ்வாறு பேசியதில் இருந்து என் தொலைபேசிக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வந்து கொண்டேயிருந்தது. சுவாமி இவ்வாறு ராம் ஜேத்மலானி பேசியிருக்கிறாரே... ஏன் யாரும் அவரை கண்டிக்கவில்லை என்று கேட்டவண்ணம் இருந்தனர். என் ஆஷ்ரம் பக்தர்களும் தொண்டர்களும் இவ்வாறு கேட்டுக் கொண்டே இருந்தனர். எனவேதான் இத்தகைய அறிவிப்பை நான் வெளியிடுகிறேன். இது அவருக்குக் கொடுக்கப்படும் அச்சுறுத்தல் அல்ல... எங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு ஜனநாயகச் செயல் அவ்வளவுதான். என் அறிவிப்பில் எந்த ஹிம்சையும் இல்லை. ஜனநாயக உணர்வை வெளிப்படுத்தும் அஹிம்சையான அறிவிப்பைத்தான் நான் வெளியிட்டுள்ளேன் என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும், சன்னியாசி ஒருவரின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்றே கருதப்படுகிறது.
நன்றி: தினமணி

No comments: